இவ்வாண்டு தந்தையர் தினத்தைக் கொண்டாடும் வகையிலும் ஜூன் பள்ளி விடுமுறையை முன்னிட்டும் பெரிய பலூன் பொம்மைகளிலிருந்து படகு வலித்தல் வரை, பல புத்துணர்ச்சியளிக்கும் நடவடிக்கைகள் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, விளையாட்டின் மூலமும் அழகிய நினைவுகளின் மூலமும் சமூகத்தை ஒன்றிணைக்க விழைகிறது.
பலூன்களால் நிறைந்த திடல்
பந்துகள் நிறைந்த 16 மீட்டர் நீளமுடைய பலூன் பொம்மை உட்பட, விசித்திரமான பலூன் கோட்டைகள், குதிரை பொம்மை பலூன்கள் எனச் சிறுவர்களை ஈர்க்கும் இடமாக சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் மாற்றப்பட்டு வருகிறது.
பலூன் பொம்மைகள் சிங்கப்பூர் நதிகளில் பயன்படுத்தப்பட்ட படகுகளைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சிறுவர்களின் புத்தாக்கத் திறனைத் தூண்டும் வகையிலும் அமைகின்றன.
நாள்: ஜூன் 13 - 15 மற்றும் 20 - 22
நேரம்: காலை 9 மணி - இரவு 8 மணி
கட்டணம்: இலவசம், முன்பதிவு அவசியம்
குடும்பப் புகைப்படங்கள்
திடல்தடத்தில் குடும்பமாக தங்கள் ஓட்டத்தைத் தொடங்கி, உடற்பயிற்சியை முடித்த பிறகு தேசியத் திடலின் உன்னத கட்டடக்கலையோடு இணைந்து விலைமதிப்பற்ற தருணங்களைப் படம் பிடித்துக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
நாள்: ஜூன் 22 வரை
நேரம்: ஜூன்13 - 15 மற்றும் 20 - 22 நாள்களில் காலை 9 மணி - இரவு 8 மணி; மற்ற நாள்களில் மாலை 4 மணி - இரவு 8 மணி
கட்டணம்: இலவசம்
மிதிவண்டி ஓட்டும் முகாம்
சிங்கப்பூர் மிதிவண்டியோட்டக் கூட்டமைப்பின் தகுதிவாய்ந்த பயிற்றுநர்களால் வழிநடத்தப்படும் இம்முகாமில், மிதிவண்டியை சமநிலைப்படுத்துதல், நம்பிக்கையுடன் மிதிவண்டியில் வலம்வருதல் போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நாள்: ஜூன் 14 - 15
கட்டணம்: இலவசம், முன்பதிவு அவசியம்
இலவச பனிக்கூழ், மென்பானம்
விளையாடிக் களைத்திருக்கும் சிறுவர்கள் முதல், உடற்பயிற்ச்சி முடித்து வரும் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஒரு குளிர்ச்சியான விருந்தாக பனிக்கூழும் மென்பானங்களும் வழங்கப்படும்.
நாள்: ஜூன் 14 - 15 மற்றும் 21 - 22
நேரம்: காலை 10 மணி - இரவு 8 மணி
கட்டணம்: இலவசம்
தந்தையர் தினத்தைத் தண்ணீரில் கொண்டாடுங்கள்!
தந்தை - பிள்ளை பிணைப்பை வலுப்படுத்த மக்கள் படகு வலித்தல் (Kayaking) குறித்த அறிமுக முகாமிற்குப் பதிவுசெய்யலாம். நீர் விளையாட்டு நிலையத்தின் உல்லாச சாகசத்தில் ஈடுபட்டு கோலாகலமாகத் தந்தையர் தினத்தைக் கொண்டாடுங்கள்!
நாள்: ஜூன் 15
நேரம்: காலை 10 மணி - பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2 மணி - மாலை 5 மணி
கட்டணம்: இருவர்க்கு $50
மேல்விவரங்களுக்கு https://www.sportshub.com.sg/events/june-specials இணையப்பக்கத்தை நாடலாம்.