அறிவார்ந்த நீச்சல் குள அனுபவ நிலையம் திறப்பு

2 mins read
5d9917da-7b63-454f-a4be-be32dbfff535
அறிவார்ந்த உணர்கருவிகள், ஐந்துவிதமான அலைகளுடன் நீச்சல் அனுபவத்தை மெருகேற்றும் நீச்சல் குளத்தைப் புதிய நிலையத்தில் காணலாம். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த நீச்சல் குள அனுபவ நிலையம் உட்லண்ட்சில், 8B@அட்மிரால்டியின் முதல் தளத்தில் (#01-04) இம்மாதம் திறந்துள்ளது.

அறிவார்ந்த உணர்கருவிகள், சுத்தம் செய்யும் ‘ரோபோட்’ இயந்திரம் போன்றவற்றின்மூலம் நீச்சல் குளப் பராமரிப்பை எவ்வாறு எளிதாக்கலாம் என்பதை இந்நிலையம் காட்சிப்படுத்துகிறது.

குறைவான சத்தத்துக்காக (36.5 டெசிபல்ஸ்) கின்னஸ் சாதனை படைத்த நீர் நிரப்பிகளுடன் இயங்கும் நீச்சல் குளம் இந்நிலையத்தில் உள்ளது.

குளத்தின் வெப்பம், மின்சாரப் பயன்பாடு, குளோரின் அளவு, pH, போன்றவற்றை உணர்கருவிகள் மூலம் கண்காணிப்பதால் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க முடிகின்றது.

நீச்சல் போட்டிகளுக்காகப் பயிற்சிசெய்வதற்கோ குடும்பமாகச் சேர்ந்து விளையாடுவதற்கோ, விருப்பத்திற்கேற்ப குளத்தின் நீரோட்ட வேகத்தை மாற்றலாம்.

அதற்கு வழிவகுக்கிறது, ‘ஐகார்டன் ஸ்விம் ஜெட் பி சீரீஸ்’ (iGarden Swim Jet P Series) கருவி. இது இவ்வாண்டு ‘டைம்’ பத்திரிகையின் தலைசிறந்த புத்தாக்கங்கள் வரிசையில் இடம்பெற்றது. ஐந்து விதமான அலைகளை உண்டாக்கும் இக்கருவியை செயலிமூலம் இயக்கலாம்.

‘டைம்’ பத்திரிகையின் 2025க்கான தலைசிறந்த புத்தாக்கங்கள் வரிசையில் இடம்பெற்ற ‘ஐகார்டன் ஸ்விம் ஜெட் பி சீரீஸ்’ (iGarden Swim Jet P Series), ஐந்து விதமான அலைகளை நீச்சல் குளத்தில் உண்டாக்கக்கூடியது.
‘டைம்’ பத்திரிகையின் 2025க்கான தலைசிறந்த புத்தாக்கங்கள் வரிசையில் இடம்பெற்ற ‘ஐகார்டன் ஸ்விம் ஜெட் பி சீரீஸ்’ (iGarden Swim Jet P Series), ஐந்து விதமான அலைகளை நீச்சல் குளத்தில் உண்டாக்கக்கூடியது. - படம்: ரவி சிங்காரம்

அக்டோபர் 10ஆம் தேதி நடந்த நிலையத்தின் திறப்பு விழாவில் சிங்கப்பூரின் தேசிய நீச்சல் வீராங்கனை குவா ஜிங் வன் அதிலிருந்த குளத்தைச் சோதித்துப் பார்த்தார்.

“நான் குளத்தில் முதலில் இறங்கியபோது நீரோட்ட வேகத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கும் பொழுதுபோக்காக நீச்சலடிப்பவர்களுக்கும் இதுபோல நீச்சல் குளத்தில் சுவாரசிய அனுபவம் வழங்குவது நல்லது,” என்றார் குவா.

நீச்சல்குள நிபுணர்கள் இவ்வாண்டு தொடங்கிய ‘அக்குவாட்டிக் சி’ (Aquatic SEA) எனும் நிறுவனம் இந்நிலையத்தைத் திறந்துள்ளது.

வீட்டு உரிமையாளர்களும் சொத்து உரிமையாளர்களும் நீடித்த நிலைத்தன்மைமிக்க தீர்வுகளை நாடுவதால் அவர்களைக் குறிவைக்கிறது இந்நிறுவனம்.

சொந்தமாக நீச்சல் குளங்களை ஏற்கெனவே வைத்திருப்போர் அல்லது வைக்க விரும்புவோர் இந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றி இந்நிலையத்துக்கு வந்து அறிந்துகொள்ளலாம்.

நீச்சல் குளச் சுவர்களையும் தரையையும் சுத்தம் செய்யும் ‘ஐகார்டன்’ இயந்திர மனிதர்.
நீச்சல் குளச் சுவர்களையும் தரையையும் சுத்தம் செய்யும் ‘ஐகார்டன்’ இயந்திர மனிதர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்