மஞ்சள்
பாரம்பரிய இந்திய உணவில் மஞ்சள் இன்றியமையாத ஒரு மசாலாப் பொருள். உணவுப் பொருள்களுக்கு வண்ணம் சேர்ப்பதுடன் உடலுக்குத் தேவையான வெதுவெதுப்பையும் மஞ்சள் அளிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, செரிமானம் ஆகியவற்றுக்கும் மஞ்சள் பெரிதும் உதவுகிறது.
கறுப்பு மிளகு
சற்றுக் காரமான சுவை கொண்ட கறுப்பு மிளகு ரசம், தொக்கு போன்ற புகழ்பெற்ற இந்திய உணவுவகைகளின் சுவையூக்கி என்று கூறலாம். சிறிதளவே சேர்க்கப்பட்டாலும் கறுப்பு மிளகு உணவுகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி மூக்கடைப்பைப் போக்கவும் உதவுகிறது.
இஞ்சி
தனித்துவமான நறுமணம் கொண்ட இஞ்சி பெரும்பாலும் மழைக்காலங்களில் உணவு வகைகளிலும் பானங்களிலும் சேர்க்கப்படும். மழைக்காலக் குளிரினால் ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றைப் போக்க இஞ்சியின் வெம்மையான தன்மை உதவும்.
ஓமம்
பெரும்பாலும், செரிமானக் கோளாறுகளைச் சரியாக்க ஓமம் பயன்படுத்தப்படுகிறது. காரமான தின்பண்டங்களில் ஓமம் சேர்க்கப்படுவதால் உடலில் வெப்பத்தை அதிகரிப்பதுடன் செரிமானத்துக்கும் ஓமம் பயனளிக்கும்.
பெருஞ்சீரகம்
இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்ட பெருஞ்சீரகத்தைப் (சோம்பு) பலரும் உணவுண்ட பிறகு சிறிதளவு வாயில் போட்டு மெல்லுவதுண்டு. குளிர்காலங்களில் பெருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் வயிறு உப்புசம் குறையும்.