முஹம்மது ஃபைரோஸ்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சையது முஹம்மது டிரேடர்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனம் வாடிக் கையாளர்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி செலுத்த அன்பளிப்பு வழங்குகிறது. அனார்கலி உணவுப் பொருட்களின் விநியோகஸ்தரான இந்நிறு வனம் தமிழ் முரசு நாளிதழுடன் இணைந்து ஒரு கிலோ அனார்கலி பொன்னி அரிசி, 200 கிராம் பாசிப் பருப்பு, ஒரு கட்டு அப்பளம் ஆகிய பொருட்களை உள்ளடக்கிய $4 மதிக்கத்தக்க அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கவுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை தேக்கா நிலைய பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ள செய்தித் தாள் விற்பனையாளரிடமிருந்து வாங்கும் ஒவ்வொரு தமிழ் முரசு பிரதிக்கும் அன்பளிப்புப் பொட்டலம் இலவசமாக வழங்கப்படும். நாளை காலை 8.30 மணியளவில் பொட்டலம் விநியோகிக்கப்படும் என்றும் தமிழ் முரசு நாளிதழை வாங்கும் முதல் 500 வாசகர்களுக்கு அது வழங்கப்படும் என் றும் சையது முஹம்மது டிரேடர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
சென்னை வெள்ளத்தைத் தொடர்ந்து பொன்னி அரிசி, பருப்புகளின் விலைகள் அதிகரித் துள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் திரு ஜாஃபர் சாதிக் குறிப்பிட்டார். "கடந்த 30 ஆண்டுகளாக அனார்கலிக்கு ஆதரவு அளித்து வரும் வாடிக் கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்த அன்பளிப்பை வழங்குகிறோம்," என்றார்.

