'காவடியாம் காவடி' ஒலிவட்டு வெளியீடு

'காவடியாம் காவடி' ஒலிவட்டு வெளியீடு

1 mins read
dbc7bb13-5d9e-4731-a165-eb66e2ee0c10
-

தைப்­பூ­சத்தை ஒட்டி முரு­க­னின் பாடல்­கள் அடங்­கிய 'காவ­டி­யாம் காவடி' ஒலி­வட்டு இம்­மா­தம் 16ஆம் தேதி, சனிக்­கிழமை தேங்க் ரோடு அருள்­மிகு தெண்டா­யுதபாணி கோயிலில் வெளி­யி­டப்பட்டது. இந்த ஒலி­வட்டைத் தயா­ரித்து அதி­லுள்ள எட்டுப் பாடல்­களை­யும் பாடி­ய­வர் திரு பரசு கல்யாண். இவர் சிங்கை­யில் பக்தி இசைக் கச்­சே­ரி­களில் பாடி­யி­ருக்­கிறார். ஏழு வயதில் பாட ஆரம்­பித்த இவர் கலை­மா­மணி திரு வீரமணி ராஜூவின் வழி­காட்­டு­த­லோடு தெய்­வீ­கப் பாடல்­கள் பாடு­வ­தில் புலமை பெற்­ற­வர். 'வீரைய்யா', 'ஆனந்தம் ஆனந்தமே' போன்ற திரைப்­ப­டங்களி­லும் பின்­ன­ணிப் பாடல் பாடி­யி­ருக்­கிறார். 'பக்தி அலை' என்ற பக்திப் பாடல்­கள் ஒலி­வட்டை முதலில் வெளி­யிட்ட திரு பரசு கல்யாண் அடுத்­து சுவாமி ஐயப்­பன் பாடல் ஒலி­வட்டை வெளி­யிட்­டார்.

'காவ­டி­யாம் காவடி' பரசு கல்­யா­ணின் மூன்றா­வது ஒலி­வட்டு வெளி­யீ­டா­கும். 'காவ­டி­யாம் காவடி' ஒலி­ வட்­டின் இசை அமைப்­பா­ளர் திரு விஜய் சங்கர். தொழில்­முறை இசை அமைப்­பா­ள­ரான இவர் ஐம்ப­துக்­கும் மேற்பட்ட தொலைக்­காட்சி நாட­கங்களின் தலைப்­புப் பாட­லுக்கு இசை அமைத்த அனு­ப­வம் உடை­ய­வர்.

இடப்பறத்தில் 'காவடியாம் காவடி' பாடலாசிரியர் திரு தாம் சண்முகம், நடுவில் இசை அமைப்பாளர் திரு விஜய் சங்கர், வலப்புறத்தில் பக்தி இசைப் பாடகர் பரசு கல்யாண். படம்: திரு தாம் சண்முகம்