சிங்கப்பூர்இலக்கியவிருதுக்கு 235 நூல்கள் சமர்ப்பிப்பு

சிங்கப்பூர்இலக்கியவிருதுக்கு 235 நூல்கள் சமர்ப்பிப்பு

1 mins read
ce8fe3f5-9639-4621-8a04-8a43f59f4d32
-

இவ்­­­­­­­­­­­­­­­வாண்­­­­­­­­­­­­­­­டின் சிங்கப்­­­­­­­­­­­­­­­பூர் இலக்­­­­­­­­­­­­­­­கிய விரு­­­­­­­­­­­­­­­துக்கு புனைவு, புனை வல்­­­­­­­லா­­­­­­­தவை, கவிதை ஆகிய மூன்று பிரி­­­வு­­­களில் கடந்த 25 ஆண்­­­­­­­­­­­­­­­டு­­­­­­­­­­­­­­­களில் இல்லாத எண்­­­­­­­­­­­­­­­ணிக்கை­­­­­­­­­­­­­­­யில் மொத்தம் 235 நூல்கள் சமர்ப்­­­­­­­­­­­­­­­பிக்­­­­­­­­­­­­­­­கப்­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­டுள்­­­­­­­­­­­­­­­ள தாக சிங்கப்­­­­­­­­­­­­­­­பூர் புத்தக வாரியம் தெரி­­­­­­­­­­­­­­­வித்­­­­­­­­­­­­­­­துள்­­­­­­­­­­­­­­­ளது. 2014ஆம் ஆண்டு சமர்ப்­பிக்­கப்­பட்ட 182 நூல்களை ஒப்புநோக்க இவ்­வாண்டு 53 நூல்கள் அதி­க­மாக வரப்­பெற்­றுள்­ளன. ஆங்கிலப் புனை­வல்­லா­தவை, சீனப் புனைவு, சீனப் புனைவல்­லா­தவை, மலாய் கவிதை, தமிழ் புனைவு ஆகிய பிரி­வு­களில் நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

நான்கு மொழி­­­­­­­­­­­­­­­களில் சமர்ப்­­­பிக்­­­கப்­­­பட்­­­டுள்ள இந்­­­நூல்­­­களுள் சிங்கப்­­­பூர் இலக்­­­கிய விரு­­­துக்குத் தேர்வு செய்­­­யப்­­­படும் நூல்­­­களின் பட்­­­டி­­­யல் மே மாதம் மத்­­­தி­­­யில் வெளி­­­யி­­­டப்­­­படும். அதனைத் தொடர்ந்து தேர்வு செய்­­­யப்­­­படும் நூல்களும் நூலா சிரியர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடம்பெறுவர். பின்னர், ஜூலை மாதம் 14ஆம் தேதி வியா­­­ழக்­­­கிழமை நடைபெறும் கோலாகல நிகழ்ச்­­­சி­­­யில் வெற்றி பெறும் நூல்கள், விரு­­­து பெற்றவர்களின் பெயர்­­­கள் அறி­­­விக்­­­கப்­­­படும்.

கலாசார விருது, 2015 தென்கிழக்காசிய எழுத்து விருது பெற்ற சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர் திரு ஜே.எம்.சாலி. ஸ்ட்ரெய்ட்ஸ் கோப்புப்படம்