உடற்பயிற்சி இல்லையேல் மூளை சுருங்கி விடும்

உடற்பயிற்சி இல்லையேல் மூளை சுருங்கி விடும்

1 mins read
99066b42-fb20-4cbc-9237-07f96f2c4909
-

எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு தொலைக்காட்சியே கதியென இருந்தால் மூளை நாளடைவில் சுருங்கி விடும் அபாயமுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மோசமான உடற்தகுதிக்கும் மூளையின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக, சராசரியாக 40 வயதை எட்டிய, இதய நோய் ஏதும் இல்லாத சுமார் 1,600 பேரிடம் 'டிரெட்மில்' ஓட்டச் சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

'டிரெட்மில்'லில் ஓடும்போது ரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது மூளை சுருங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக, 30 அல்லது 40- வயதுகளில் இருப்போர் உடற்பயிற்சிக்கென அதிக நேரத்தைச் செலவிடாத பட்சத்தில் வயதான காலத்தில் மூளை சுருங்கி, மறதி நோயால் அவதிப்படலாம் என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கை.