துடிப்புடன் மூப்படையும் திருமதி ஜோசஃபின்.

துடிப்புடன் மூப்படையும் திருமதி ஜோசஃபின்.

1 mins read
7e9b7d31-a803-471b-a5a6-35935a32ded5
-

முஹம்மது ஃபைரோஸ்

துடிப்புடன் மூப்படையும் திருமதி ஜோசஃபின். வயது 76. பல வகை விளையாட்டுகள், தினந்தோறும் உடற்பயிற்சி, யோகாசனம், ஆரோக்கிய சமையல், தோட்ட வேலை, தையற்கலை, நடனம் என திருமதி ஜோசஃபின் ரோமன் மூத்த வயதிலும் தம்மை அர்த்த முடைய பணிகளில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரைப் பொறுத்தவரை வயது என்பது வெறும் எண் மட்டும்தான். தமக்குப் பிடித்தமான காரியங் களில் சுதந்திரமாக ஈடுபடவும் புதியவற்றைக் கற்கவும் அது ஒரு தடையல்ல என்கிறார்.

இன்று அனைத்துலக மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. துடிப்புடன் மூப்படைதல் பிரிவில் சமூகத்துக்குத் தலை சிறந்த பங்களிப்புக்காக திருமதி ஜோசஃபினுக்கு கடந்த சனிக் கிழமை விருது வழங்கிக் கௌர வித்தது லிஷாவின் மகளிர் அணி. மகளாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக, குடும்பத் தலைவியாக ஒரே நேரத்தில் பல பொறுப்புகள் வகிக்கும் மகளிருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் திருமதி ஜோசஃபின். அதுவும் குறிப்பாக, சிங்கப் பூரில் மூப்படைந்து வரும் சமூகத் தில் துடிப்புடன் மூப்படைவதற்கு இவர் வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.

துடிப்புடன் மூப்படையும் திருமதி ஜோசஃபின். படம்: திமத்தி