பிரபஞ்சன் வழிநடத்தும் நாவல் பயிலரங்கு

பிரபஞ்சன் வழிநடத்தும் நாவல் பயிலரங்கு

1 mins read
8b4685d5-f5b3-4bf0-a81f-8ac9546af27a
-

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் தங்க­மீன் பதிப்­ப­கம் முழுநாள் நாவல் பயி­ல­ரங்கை நடத்­து­கிறது. இப்­ப­யி­ல­ரங்கை எழுத்­தா­ளர் பிர­பஞ்சன் வழி நடத்த இருக்­கிறார். சிங்கப்­பூர் எழுத்­தா­ளர் ­களும் இதில் பங்கு பெறு­கிறார்­கள். 10 ஏப்ரல் 2016, ஞாயிற்­றுக்­கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை அங் மோ கியோ பொது நூல­கத்­தில் இப்­ப­யி­ல­ரங்கு நடைபெற இருக்­கிறது. ஒரு நாவ­லுக்­கான கருவைத் தேர்ந்­தெ­டுப்­ப­தில் தொடங்கி, கதை, உள்­ள­டக்­கம், கதா­பாத்­தி ­ரங்கள், பின்­பு­லம், கதை­யோட்­டம், சிக்கல், சூழல் என ஒரு நாவலைக் கைபிடித்து அழைத்­துச் செல்லும் அனைத்து அம்­சங் களை­யும் அலசி ஆராய்ந்து அறி­மு­கப்­படுத்த இருக்­கும் பயி­ல­ரங்கு இது.

எழுத்­தா­ளர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள், பொது­மக்­கள் கலந்து கொண்டு பய­னடை­ய­லாம். தங்க­மீன் வாசகர் வட்டம் ஒருங்­கிணைக்­கும் இப்­ப­யி­ல­ரங்­கிற்­கான அனுமதி இல­வ­சம். ஆனால், முன்­ப­திவு அவ­சி­யம். முன்­ப­திவு முடி­வு­றும் நிலையில் உள்ளது. மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­களுக் ­கான குறிப்­பிட்ட அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. முதலில் வரு­ப­வர்­களுக்கு முதலில் என்ற அடிப்­படை­யில் வாய்ப்­பு­கள் கிடைக்­கும். பயி­ல­ரங்­கில் பங்­கேற்­ப­வர்­களுக்கு மதிய உணவு வழங்கப்­படும். th­a­n­g­a­m­e­en@ho­t­m­ail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு எழுதி, முன்­ப­திவு செய்து கொள்ள வேண்டும். மேல் விவ­ரங்கள் வேண்­டு­வோர் 81865530 என்ற எண்ணை அழைக்­க­லாம்.