மலேசிய எழுத்தாளர்களுடன் சுவையானதொரு சந்திப்பு

மலேசிய எழுத்தாளர்களுடன் சுவையானதொரு சந்திப்பு

1 mins read

தங்க­­­மீன் வாசகர் வட்ட ஏற்­­­பாட்­­­டில் 'மலேசிய எழுத்­­­தா­­­ளர்­­­க­­­ளோடு ஒரு கோப்பைத் தேநீர்' என்ற இலக்­­­கி­­­யக் கலந்­­­துரை­­­யா­­­டல் கடந்த சனிக்­­­கிழமை மாலை அங் மோ கியோ பொது நூல­­­கத்­­­தில் நடை­­­பெற்­­­றது. மலேசிய எழுத்­­­தா­­­ளர் கோ. புண்­­­ணி­­­ய­­­வா­­­னும் மலே­­­சி­­­யா­­­வின் 'தென்றல்' வார இதழின் ஆசி­­­ரி­­­யர் வித்­­­யா­­­சா­­­க­­­ரும் வாச­­­கர்­­­க­­­ளோடு கலந்­­­துரை­­­யா­­­டினார்­­­கள். மலேசிய இந்­­­தி­­­யர்­­­களைப் பற்றி, 'இவன் நட்ட மரங்க­­­ளெல்­­­லாம் நிமிர்ந்து விட்டன; இவன் நடும்­­­போது குனிந்த­­­வன்­­­தான்; இன்னும் நிமி­­­ர­­­வில்லை' என்ற புகழ்­­­பெற்ற கவிதையை எழுதிய கோ. புண்­­­ணி­­­ய­­­வான் தமது அறிமுக உரையில், தொண்ணூ­­­று­­­கள் வரை­­­யி­­­லான சீரான மலே­­­சி­­­யத் தமிழ் இலக்­­­கிய வளர்ச்­­­சியை­­­யும் அதற்­­­குப்­­­பின் ஏற்­­­பட்ட தேக்க நிலையை­­­யும் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

'தென்றல்' வார இதழின் ஆசி­­­ரி­­­யர் வித்­­­யா­­­சா­­­கர், மலேசிய இளை­­­யர்­­­களிடையே தமிழ் வாசிப்­­­பு குறைந்து வரு­­­வ­­­தா­­­கக் கூறினார். எழு­­­து­­­ப­­­வர்­­­களின் எண்­­­ணிக்கை குறைந்து வரு­­­வதற்கு, தமிழ் இலக்­­­கி­­­யங்களை, புத்­­­த­­­கங்களை வாசிப்­­­ப­­­வர்­­­களின் எண் ­­­ணிக்கை குறைந்து வருவதே காரணம் என்றார். இன்றைய தலைமுறை நீண்ட கதைகள், நாவல்­­­கள் போன்ற­­­வற்றைப் படிப்­­­ப­­­தற்­­­குத் தயாராக இல்லை. மாறாக, சிறு சிறு துணுக்­­­கு­­­களையே வாசிக்க முற்­­­படு­­­கின்ற­­­னர் என்ற கவலையை வெளிப்­­­படுத்­­­தினார்.

'ஒரு கோப்பைத் தேநீர்' நிகழ்ச்சியில் பங்கேற்ற கோ.புண் ணியவான் (இடது), வித்யாசாகர் (வலது). படம்: தங்க­­­மீன் வாசகர் வட்டம்