தமிழ் அரும்பு 2016

தமிழ் அரும்பு 2016

1 mins read
bbd93463-aa1c-4b3c-98f2-62d1dde1a535
-

செங்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு 2016 ஏப்ரல் 2ஆம் நாள் காலையில் செங்காங் சமூக மன்ற உள்ளரங்கில் 'தமிழ் அரும்பு 2016' என்னும் நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டாக நடத்தியது. அத்துடன், மாணவர்களிடையே பேச்சுத்திறனையும் பாடும்திறனையும் வளர்க்கக் கருத்துக்களம் என்னும் விவாதப்போட்டியையும் பாட்டுப்போட்டியையும் நடத்தியது. கருத்துக்களத்துக்கான சுழல் கோப்பையை இந்த ஆண்டு பொங்கோல் உயர்நிலைப்பள்ளி வென்றது.

பாட்டுப்போட்டியில் மாணவர்கள் கண்ணதாசன், வைரமுத்துவின் தத்துவப்பாடல்களைப் பாடினர். 'இன்றைய மாணவர்கள் தமிழ்மொழிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்களா? இல்லையா?', 'திறன்பேசி மாணவர்களுக்கு அதிக நன்மை அளிக்கிறதா? இல்லையா?' ஆகிய தலைப்புகளில் தங்கள் கருத்துகளைக் கருத்துக் களத்தில் எடுத்துரைத்தனர். செங் காங் உயர்நிலைப்பள்ளி, சிராங்கூன் உயர்நிலைப்பள்ளி, பொங்கோல் உயர்நிலைப்பள்ளி போட்டியில் கலந்துகொண்டன. படம்: செங்காங் சமூக மன்றம்