ப. பாலசுப்பிரமணியம்
தமிழ்மொழியின் வளத்தை இளை யர்கள் அறிய வேண்டும். அதோடு மற்ற இனத்தவரும் தமிழ் மொழி யின் மதிப்பை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு நூதன முயற்சியில் இறங்கி யது 'IM Prof' எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணத்துவர்கள் சங்கம். தமிழ்மொழி விழாவை முன் னிட்டு தேசிய நூலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'தமிழ் = ஒரு காலப் பயணம்' (Tamil = A Time Travel) எனும் தலைப்பில் தமிழ்மொழியின் நீண்ட நெடும் பயணத்தை அது ஆராய்ந்தது. தமிழ்மொழியின் வரலாறு, இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் பின்னணி, அர்வி (arwi) மொழிக் கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகள், தமிழ் மொழியின் உலகளாவிய தாக்கம் போன்ற விஷயங்கள் கலந்துரையாடல், நடிப்பு, காணொளி வழி உணர்த் தப்பட்டன. உள்துறை அமைச்சின் நாடாளு மன்றச் செயலாளர் அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அம்ரின் அமின், தமிழ் மொழிக்கு அதிக பொருளியல் மதிப்பு இருப்பதோடு பண்டைய நாகரிகத்தில் இந்திய கலாசாரம் ஆக பழமை வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது என்றார்.
தமிழ்மொழி, இந்திய கலாசார தாக்கம், வட்டார அளவில் தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளிலும் தென்படுவதோடு உள்ளூர் மலாய் திருமணங்களிலும் இந்திய கலாசாரத்தின் அம்சங்கள் இருக்கவே செய்கின்றன என அவர் விவரித்தார். தமிழ் மொழி தொடர்ந்து வளர வேண்டும். ஏனெனில் அது சிறப்பு வாய்ந்த இந்திய கலாசாரத் தின் ஆன்மாவாக விளங்குகிறது என்றும் அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.

