ப. பாலசுப்பிரமணியம்
தங்களுக்கு ரத்தம் தொடர்பான நோய் இருப்பது குறித்து ஒவ் வொரு நாளும் ஆறு சிங்கப்பூரர் களுக்குத் தெரிய வருகிறது. மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர்களில் பலர் இறப்பது உறுதி. இவர்களுக்கு உதவும் வகையில் எலும்பு மஜ்ஜை தானத்தை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவிருக் கிறது. 2018ஆம் ஆண்டிற்குள் மேலும் 50,000 எலும்பு மஜ்ஜை தானம் செய்பவர்களைத் தேடும் முயற்சியில் எலும்பு மஜ்ஜை தானத் திட்ட அமைப்பு இறங்கியுள்ளது. இதன் தொடர்பில், 'புரொ ஜெக்ட் டுமோரோ' (Project Tomorrow) எனும் மூன்று ஆண்டு தானத் திட்டத்தை அது நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தது.
கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை அமைப்பு கொடுத்த தகவலின்படி, அதன் பதிவேட்டில் தற்போது கிட்டத்தட்ட 62,000 எலும்பு மஜ்ஜை தானம் செய்பவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் பொருத்தமான எலும்பு மஜ்ஜைக் காக அமைப்பிடம் 45 விண்ணப் பங்கள் செய்யப்படுகின்றன.
'புரொஜெக்ட் டுமோரோ' தானத் திட்டத்தைத் தொடங்கி வைத்து நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எலும்பு மஜ்ஜை தானத் திட்ட அமைப்பின் தலைமை நிர்வாகி ஜேன் பிராயர். படம்: எலும்பு மஜ்ஜை தானத் திட்ட அமைப்பு


