முஹம்மது ஃபைரோஸ்
புனித ரமலான் மாதத்தை முன் னிட்டு விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள மலபார் பள்ளிவாசல் மற்ற பள்ளிவாசல்களைப் போன்று நோன்புக் கஞ்சியை விநியோகித்து வருகிறது. மாலைவேளை அஸர் தொழுகை முடிந்தவுடன் கஞ்சிப் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படு கின்றன. முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் கஞ்சிப் பாக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசை பிடித்துக் காத்திருக்கின்றனர்.
இனம், சமய வேறுபாடின்றி அனைத்து சமயத்தினரும் இந் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். நாவின் சுவை அரும்புகளைப் பதம் பார்க்கும் தனிச்சிறப்புமிக்க மலபார் கஞ்சின் நறுமணமும் சுவையுமே மக்களின் விருப்பத் திற்குக் காரணம். ஒரு நாளைக்கு நான்கு பெரிய பானைகளில் கிட்டத்தட்ட 200 கிலோ கிராம் அரிசி மூலப் பொருட்களுடன் சேர்த்து சமைக் கப்படுகிறது என்று தமிழ் முரசிடம் கூறினார் மலபார் பள்ளி வாசல் தலைவர் ஹாஜி ஒஸ்மான் அப்துல்லா.
"ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,000 பேர் வரை கஞ்சிப் பாக் கெட்டுகளைப் பெற்றுக் கொள் கின்றனர். அதுமட்டுமல்லாமல், இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கஞ்சி, குளிர் பானம், பழங்கள், உணவு போன்றவை வழங்கப்படுகின்றன," என்றார் அவர். தமிழ் முஸ்லிம்கள், மலையாள முஸ்லிம்கள், பங்ளாதேஷியர்கள், மலாய்க்காரர்கள் என பல மொழிகள் பேசும் முஸ்லிம்கள் இஃப்தார் நிகழ்ச்சியில் ஒன்று இணைவது பன்முகத்தன்மை யையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிப்பதாக 70 வயது ஹாஜி ஒஸ்மான் தெரிவித்தார்.

