'இசைக்கு மொழி தடையல்ல'

2 mins read
64a4df94-dafa-4c81-a35f-43377596a2f5
-

நித்திஷ் செந்தூர்

இசைக்கு இனம், மொழி, மதம் என எந்த பேதங்களும் இல்லை எனும் கூற்றுக்கு முன்னுதாரண மாகத் திகழ்கின்றார் 46 வயது சீன ஆடவர் ஸ்டீஃபன் யூங் கீ செங். இளம் வயதிலிருந்தே மலாய், சீன, ஆங்கிலப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தமிழ்ப் பாடல்களையும் பாடி ஃபேஸ்புக், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். ஒரு சீனர் தமிழ்ப் பாடல்களை இவ்வளவு தெளிவாக வும் ஆர்வமாகவும் பாடுவதைக் கண்டு பலரும் வியந்துள்ளனர்.

மலேசியாவிலுள்ள கெடா மாநிலத்தில் பிறந்த இவர் தற் போது சிங்கப்பூரில் 'செர்டிஸ் சிஸ்கோ' பாதுகாவல் நிறுவனத் தில் மனிதவள அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான இவர், "நான் இதர மொழிப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த போது, எனது நண்பர் சந்திரா, உன்னால் தமிழ்ப் பாடல்களைப் பாட முடியாது என்றார். அதனைச் சவாலாக ஏற்றுக்கொண்டு தமிழ்ப் பாடல்களைப் பாடத் தொடங் கினேன்," எனத் தெரிவித்தார். ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களுக்கு அறிமுகமான ஸ்டீஃபன், தீபாவளி கதம்ப நிகழ்ச்சி ஒன்றில், 'சிக்குப் புக்கு ரயிலே' பாடலைப் பாடினார். "தமிழ் வரிகளைத் தெளிவாக உச்சரிக்க கடினமாக இருந்தது. பாடலைப் பாடிய பிறகு, அனை வரும் கைதட்டி உற்சாகம் அளித் தது எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது," என்றார் ஸ்டீஃபன். அதன் பிறகு, தமிழ்ப் பாடல் களைப் பாடுவதில் செய்யும் பிழை களைத் திருத்திக்கொள்ள பல பயிற்சிகளை மேற்கொண்டபடியே தொடர்ந்து தமிழ்ப் பாடல்களைப் பாடி வந்தார்.

கேலாங் சிராய் சமூக மன்றத்தில் கடந்தாண்டு நடந்த தீபாவளி இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடினார் ஸ்டீஃபன்.