எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியுடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியுடன் கலந்துரையாடல்

2 mins read
b98b3ca1-4878-4b44-80a4-229b0c8a840c
-

கலைப்பித்தர்கள் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரை யாடலில் தமிழக எழுத்தாளர், நடிகர் திரு வேல. ராமமூர்த்தி கலந்துகொண்டார். இம்மாதம் 3ஆம் தேதி நடந்த இக்கலந்துரையாடலில் தான் எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற நூலைப் பற்றி வேல. ராமமூர்த்தி பேசினார். அப்போது, குற்றப்பரம்பரை நூலை எழுத தம்மை தூண்டிய சம்பவங்கள், அதில் குறிப்பிடப் பட்டுள்ள கதை மாந்தர்கள் பற்றி விளக்கிப் பேசினார் அவர். மேலும் விரைவில் அது திரைப்படமாகவும் உருவாகவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

அதன் பிறகு அங்கு வந்தி ருந்தவர்கள் எழுதிக் கேட்ட கேள்விகளைத் தொகுத்துக் கேட்டார் கழகத்தின் ஆலோசக ரான திரு ரா. கலாமோஹன். இந்தப் பேச்சும் கலந்துரையாடலும் வந்திருந்த 100 பேரை வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சிக்கு மற்ற அமைப்பு களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் கலைப்பித்தர்கள் கழகத்தின் அறங்காவலர் திரு பழனியப்பனும் வந்திருந்தார்கள். ஆனந்த பவன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய கலைப் பித்தர்கள் கழகத்தின் தலைவி க. சாந்தி இளவரசி தனது புதிய செயற்குழுவை அறிமுகப்படுத்தி னார். "நாங்கள் தமிழ் சமூகத்தில் உள்ள வசதி குறைந்தோருக்கு மைலோ, ஓட்ஸ், சமையல் எண் ணெய், பிஸ்கட்டுகள், பால், பீஹூன், அரிசி, சீனி, போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அனைத்தையும் ஒன்று சேர்த்து அன்பளிப்புக் கூடையாக வழங்குகிறோம்.

எழுத்தாளர் திரு. வேல. ராமமூர்த்தியிடமிருந்து 'குற்றப்பரம்பரை' நூலைப் பெற்றுக்கொள்ளும் கலைப்பித்தர்கள் கழகத்தின் தலைவி க. சாந்தி இளவரசி. அருகில் கழகத்தின் ஆலோசகர் திரு. ரா. கலாமோஹன். படம்: தியாக ரமேஷ்