மறைந்த விஞ்ஞான மேதை அப்துல் கலாமிற்கு அஞ்சலி

மறைந்த விஞ்ஞான மேதை அப்துல் கலாமிற்கு அஞ்சலி

1 mins read

தலைசிறந்த விஞ்ஞானி, தொழில் நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர், அனைவராலும் மதிக்கத்தக்க அற்புத பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாகக் கருதப்படும் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மறைந்து ஓராண்டு ஓடிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் நாள் நம்மைவிட்டுப் பிரிந்த அன்னாரின் நினைவஞ் சலி ஒன்றை சிங்கப்பூர் இந்தியர் கள் வருகிற 31.7.2016 ஞாயிறு மாலை 6.30 மணிக்குப் பாலஸ்டியர் சாலை, இந்தியர் சங்க அரங்கில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய நாட்டின் தென் கோடித் தீவான ராமேசுவரத்தில் பிறந்து, நாட்டின் தலைநகர் வரை தன் அறிவு சாம்ராஜ்யத்தைப் பரப்பி, உலக மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கிய மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்களின் இந்த அமைதியான நினைவஞ்சலியில் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் திரு.கேசவபாணி, சிங்கப்பூரின் இந்தியத் தூதர் திருமதி விஜய் சிங் தாக்கூர் ஆகியோர் பங்கேற்பர். திரு கலாமின் சகோதரர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டு, அவர் பற்றிய நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் திரு கலாமின் உயர் கருத்துகளைப் படிப்பர். திரைக் கவிஞர் ந.முத்துக் குமார் இயற்றிய கலாம் பற்றிய பாடல் இசையமைப்புடன் அரங்கில் ஒலியேறும். நிகழ்ச்சியைக் காண அனை வரும் வருகை தர ஏற்பாட்டாளர் கள் வேண்டிக் கொள்கின்றனர்.