சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அதன் 40ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரபுக் கவிதைப் போட்டியை நடத்துகிறது. பரிசுகள்: முதல் பரிசு $1,000; 2ஆம் பரிசு $750; 3ஆம் பரிசு $500. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $250. மரபுக் கவிதைக்கான விதிகள்:
சாங்கி விமான நிலையம், ஜூரோங் பறவைப் பூங்கா, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், செந்தோசா, குட்டி இந்தியா ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து அது பற்றி மரபுக் கவிதை எழுத வேண்டும். கவிதை எந்தப் பாவினத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதையின் அளவு 32 வரிகளுக்குக் குறையாமலும் 40 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். ஒருவர் ஒரு கவிதை மட்டுமே போட்டிக்கு அனுப்பவேண்டும். ஆனால், அசலுடன் மூன்று நகல்கள் கட்டாயம் அனுப்பவேண்டும். 4 பிரதிகள் இல்லாத கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. பொதுவான விதிகள்:
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் பதவிகளில் இருப்போர் மட்டும் போட்டியில் பங்கேற்கமுடியாது. மற்ற செயலவை உறுப்பினர்கள் பங்கேற்கலாம். கவிதைகள் எழுதப் பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி அனுப்பவேண்டும். அத்துடன் அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டா. படைப்புகளைக் கூடிய வரை கணினியில் அச்சிட்டு அனுப்பவேண்டும். எழுதி அனுப்பி னால் கையெழுத்து புரியும்படி தெளிவாக இருக்கவேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கவேண்டும். சாதாரண அஞ்சலில்தான் அனுப்பவேண்டும், மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது. கவிதை தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும். போட்டி குறித்த நடுவர் களின் முடிவே இறுதியானது.
கவிதைகள் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், Blk 723, #13-149, Yishun Street 71, சிங்கப்பூர் 760723 எனும் முக வரிக்கு 31.08.2016க்குள் வந்து கிடைக்கும்படி அனுப்பவேண்டும். மேல் விவரங்களுக்கு நா. ஆண்டி யப்பன் -97849105; சுப. அருணா சலம் 93221138 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.
www.singaporetamilwriters.com இணையத்தளத்தையும் பார்க்கலா.

