'போக்கிமான் கோ': தடை செய்த முதல் நாடாக ஈரான்

'போக்கிமான் கோ': தடை செய்த முதல் நாடாக ஈரான்

2 mins read
8f0aae84-4384-413c-80c0-547f7bcd4ce0
-

சிங்கப்­பூ­ரில் 'போக்­கி­மான் கோ' விளை­யாட்டு அறி­முக­மாகி சில நாட்களே ஆகி­யுள்ளன. அது குறித்து பல தரப்­பு­களி­லி­ருந்­தும் கலவை­யான கருத்­து­கள் வெளி­யா­கி­வ­ரும் இவ்­வேளை­யில் ஈரானில் சென்ற வெள்­ளிக்­கிழமை முதல் அந்த விளை­யாட்டு தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த விளை­யாட்டைத் தடை செய்யும் முதல் நாடாக ஈரான் இருப்­பது குறிப் ­பி­டத்­தக்­கது. ஈரானின் இணைய நட­ வ­டிக்கை­களைக் கண்­கா­ணித்து வரும் உயர் மன்றம் இந்த முடிவைப் பரிந்­துரைத்­த­தாக பிபிசி தெரி­வித்­தது. ஈரானில் இணையப் பயன்­பாட்டுக் கட்­டுப்­பாடு­கள் நடப்­பில் உள்ள நிலையில் பலர் இந்த விளை­யாட்டைப் பற்றிய கருத்­து­களை இணை­யத்­தில் பகிர்ந்­து­ கொண்ட­னர். 'போக்­கி­மான் கோ' விளை­யாட்டை உரு­வாக்­கிய நிறு­வ­னத்­ தி­டம் அதில் சில மாற்­றங்களைச் செய்ய ஈரான் அர­சாங்கம் கோரி­ய­போ­தும் அந்­நி­று­வ­னம் ஒத்­துழைப்பு நல்­கா­த­தால் இந்தத் தடை நடை­முறைப்­படுத்­தப்­பட்­டுள்­ளது.

இதை மிகுந்த கவ­னத்­து­டன் விளை­யா­டு­மாறு மேலும் பல நாட்டு அர­சாங்கங்கள் மக்­களைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளன. இந்த விளை­யா­ட்டின் கார­ண­மாக மர­ணங்கள், விபத்­து­கள், குற்றச் செயல்­கள் நடை­பெற்­றுள்­ள­தால் அதி­கா­ரி­கள் இவ்விளையாட்டுக்கு வலுவாக எதிர்ப்­பு தெரி­வித்­துள்­ள­னர். வாக­னங்கள் ஓட்­டும்­போது இந்த விளை­யாட்­டில் ஈடு­ப­டக்­ கூ­டாது என மும்பை போலிசார் அதி­ர­டி­யாக அறி­வித்­துள்­ள­னர். 'போக்­கி­மான்'களைச் சேக­ரிக்­கும் சுவா­ர­சி­யத்­தில் சிலர் நாட்டு எல்லை­க­டந்து சென்ற சம்ப­வங்களும் உள்ளன. இந்­தோ­னீ­சிய போலிசார் வேலையில் இருக்­கும்­போது இந்த விளை­யாட்­டில் ஈடு­ப­டக்­கூ­டாது என அந்­நாட்டு அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. ஆனால், இந்த விளை­யாட்டு விரும்­பி­களோ விபத்து, குற்­றச்­ செ­யல்­களுக்கு இந்த விளை­யாட்டு மட்டும் கார­ண­மல்ல என்று தன்னிலை விளக்­கம் அளித்­துள்­ள­னர். கடுமை­யான கட்­டுப்­பாடு­ களை விதிக்­க­லாம், ஆனால் விளை­யாட்டைத் தடை செய்ய வேண்­டி­ய­தில்லை என்பது அவர்­களின் நிலைப்­பாடு.

அட்டை­களை வைத்து விளை­யா­டும் 'போக்­கி­மான்' விளை­யாட்டு அறி­மு­கப்­படுத்­தப்­பட்­ட­போதே அதை விளை­யா­டக்­கூ­டாது என சவூதி அரே­பி­யா­வில் சமய ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வின் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் உள்ள தர்கா ஆலா ஹஸ்­ரத்­தி­லும் இந்த விளை­யாட்­டுக்­குத் தடை­ வி­திக்­கப்­பட்­டது. சிங்கப்­பூ­ரில் கல்வி அமைச்­சும் சிங்கப்­பூர் போலிஸ் படையும் 'போக்­கி­மான் கோ' விளை­யா­டு­வோர் மிகுந்த கவ­னத்­து­டன் செயல்­பட வேண்டும் என அறிக்கை விடுத்­துள்­ளன. பெற் றோர் பலர், "ஆபத்­தான இத்­தகைய விளை­யாட்டைத் தடை­ செய்­ய­லாமே," என்று இணை­யம்­ வ­ழி­யா­கக் கருத்­துரைத்­துள்­ள­னர். ஆனால் விளை­யாட்டு ஆர்­வ­லர்­களோ விளை­யாட்­டில் மிகுந்த ஆர்வம் காட்டி வரு­கின்ற­னர்.