திருப்பதி மாதிரி கோயில் திறப்பு

திருப்பதி மாதிரி கோயில் திறப்பு

1 mins read
16a38554-7efd-464d-9ba2-f87405ed812d
-

திருப்பதி: விஜயவாடாவில் திருமலை ஏழுமலையான் மாதிரி கோயில் திறக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் இம்மாதம் 12ஆம் தேதி, 'புஷ்கரம்' என்ற புனித நீராடல் நடக்கிறது. இதற்கு வரும் பக்தர்கள், ஏழுமலை யானை வழிபடுவதற்காக விஜயவாடாவில் மாதிரி கோயிலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கியிருக்கிறது.

ஞாயிறு காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் கிருஷ்ணா நீர் கொண்டு மகாசம் ரோட்சம் செய்து ஏழுமலையான் சிலையைக் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பின்னர் பொதுமக்களும் ஏழுமலையானைத் தரிசித்தனர்.

விஜயவாடாவில் திருமலை ஏழுமலையான் மாதிரி கோயிலில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். படம்: இந்திய ஊடகம் விஜயவாடாவில் திருமலை ஏழுமலையான் மாதிரி கோயிலில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். படம்: இந்திய ஊடகம்