கப்பல் போக்குவரத்துக் கண்காணிப்பில் தேன்குமாரியின் கருடப் பார்வை

கப்பல் போக்குவரத்துக் கண்காணிப்பில் தேன்குமாரியின் கருடப் பார்வை

1 mins read
9bc4aa36-aa3e-4674-bbbb-f4f4547e936c
-

முஹம்மது ஃபைரோஸ்

வேலையிடத்தில் பெரிய கணினித் திரைகளை உற்று நோக்கியபடி அதில் நகரும் வண்ணமிகு சின் னங்களைப் பார்வையிடுகிறார் 47 வயதாகும் தேன்குமாரி. ஆனால் இவர் நிபுணத்துவ விளையாட்டா ளர் அல்ல. கடற்துறை, துறைமுக ஆணை யத்தின் கப்பல் போக்குவரத்து நிர்வாகத் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிவரும் கப்பல் போக்குவரத்து அதிகாரி இவர். சிங்கப்பூர் துறைமுகம், சிங் கப்பூர் நீரிணை ஆகியவற்றுக் குள் வரும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பெரிய கப்பல்களுக்கு முக்கியப் போக்குவரத்துத் தகவல் களை வழங்குவது இவரது பணி. திரையில் தோன்றும் சின்னங் கள் நகர்ந்துகொண்டிருக்கும் கப் பல்களின் இருப்பிடங்களை உடனுக்குடன் காட்டுகின்றன.

உதாரணத்திற்கு, இளஞ்சிவப்பு சின்னம் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலைக் குறிக்கிறது. வெள்ளை சதுரங்கள் சரக்குக் கப் பல்களையும், பச்சை சின்னங்கள் பயணிகள் கப்பல்களையும் பிரதி நிதிக்கின்றன. தேவை இருந்தால், குறிப்பிட்ட சின்னத்தைத் தெரிவுசெய்யும்போது கப்பல் பற்றிய தகவல் திரையில் காட்டப்படுகின்றது. கருடப் பார் வையுடன் அந்தந்த கப்பல்களுக் குத் தகவல்களை உடனுக்குடன் திருமதி தேன் வழங்குகிறார்.

கடற்துறை, துறைமுக ஆணையத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டு மையத்தில் கப்பல் போக்குவரத்து அதிகாரி தேன்குமாரி, சிங்கப்பூர் கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறார். படம்: திமத்தி டேவிட்