முஹம்மது ஃபைரோஸ்
எலும்புத் தேய்மான நோயானது மூத்தோர் எதிர்நோக்கும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினை. எலும்புகள் பலவீனமாகவும் எளிதில் முறியக் கூடியவையாகவும் இருந்தால் கீழே விழும்போது அவை உடைந்து, நடமாட்டத்தை இழக்கச் செய்து வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும். 87 வயது திருவாட்டி காசிநாதன் லட்சுமி உட்பட நிறைய மூத்தோர் அஞ்சும் நோய்களில் இதுவும் ஒன்று. பெண்டமியர் சாலையில் ஓரறை வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் இவருக்கு முதுமையின் காரணமாக ஒழுங் காக நடக்க முடியாது.
அத்துடன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகிய நாள்பட்ட நோய்களும் திருவாட்டி லட்சுமிக்கு உள்ளன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஒருமுறை கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டது. திருவாட்டி லட்சுமி போன்ற வசதிகுறைந்த, தனிமையில் வாழும் மூத்தோரின் உடல்நல ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு 'ஆன்லின்', என்டியுசி ஃபேர்பிரைஸ் ஆகிய இரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சமூகத் திட்டத்தை நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பெண்டமியர் சாலையில் உள்ள 'லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்' அமைப்பு (Lions Befrienders) மூத்தோர் பராமரிப்பு நிலையத்தி லுள்ள 60 மூத்தோருக்கு நேற்று எலும்புப் பரிசோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது. அவர்களது கால் எலும்புகளின் உறுதியையும் பலத்தையும் சோதிப்பது அதன் நோக்கம். எலும்புகள் வலுவாக இருப்ப தன் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்ததுடன் பலவீனமான எலும்பு கள் உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆலோசனை யையும் கூறினர்.
'லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்' அமைப்பு மூத்தோர் பராமரிப்பு நிலையத்தில் திருவாட்டி காசிநாதன் லட்சுமியுடைய எலும்புகளின் உறுதி பரிசோதிக்கப்படுகிறது. படம்: ஆன்லின் நிறுவனம்

