வில்சன் சைலஸ்
உள்ளூர், வெளியூர் எனப் பல மேடைகளை வலம் வந்துள்ள மணிமாறன் நடனக் குழுவினர் அண்மையில் மியன்மாரில் தங்கள் நடனத்தைப் படைத்தனர். கடந்த 24, 26 தேதி களில் மியன்மாரின் யங்கோன், மௌலம்யின் ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 25 ஆடல், பாடல் அங்கங்களை அவர்கள் மேடை யேற்றினேர். யங்கோனில் ஏற்பாடு செய்யப் பட்ட தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் ஐந்தாம் ஆண்டு தமிழ்மொழித் தேர்வு பரிசளிப்பு விழாவில் மணிமாறன் குழுவின ரின் 'சங்கே முழங்கு', 'நவக்கிரக நடனம்' ஆகியவற்றைப் படைத் தனர். "தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் மியன்மார் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. மணிமாறன் குழுவும் அதில் இடம்பெற்றது மனநிறைவாக உள்ளது," என்றார் உள்ளூர் நடனக் கலைஞர் திரு மணிமாறன்.
குறிப்பாக, பத்து ஆண்டுகளுக்கு முன் இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளிக்கு சிங்கப்பூர் இளையர் விழாவில் தங்கப் பதக் கம் வென்றுத் தந்த 'நவக்கிரக' நடனத்தை இயற்றி உருவாக்கி யவர் திரு மணிமாறன். கடந்த 24, 26 தேதிகளில் மியன்மாரின் யங்கோனில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட தமிழ்மொழித் தேர்வு பரிசளிப்பு விழாவில் இடம்பெற்ற மணிமாறன் குழுவினர் படைத்த நவக்கிரக நடனம். படம்: மணிமாறன் நடனக் குழு

