'பெருங்குடல் புற்றுநோய் தவிர்க்கப்படக்கூடியதே'

'பெருங்குடல் புற்றுநோய் தவிர்க்கப்படக்கூடியதே'

2 mins read

சிங்கப்­பூ­ரில் 50 வய­துக்கு மேற்­பட்­டோர் பெருங்­கு­டல் புற்­று ­நோ­யால் பாதிக்­கப்­படு­வது தற் போது அதி­க­ரித்­துள்­ளது. ஆண்­களுக்கு ஏற்­படும் புற்­று­நோய்களுள் முத­லா­வது இடத்தை­யும் பெண்­களுக்கு ஏற்­படும் புற்­று­நோய்களுள் இரண்டா­ம் இ­டத்தை­யும் இது பிடித்­துள்­ளது. இருப்­பி­னும், 50 முதல் 69 வய­துக்­குட்­பட்­டோ­ரில் மூவரில் ஒருவரே பரிந்­துரைக்­கப்­பட்ட இடை­வெ­ளி­களில் பெருங்­கு­டல் புற்­று­நோய் பரி ­சோ­தனைக்­குச் செல்­கின்ற­னர். "பெருங்­கு­டல் புற்­று­நோய் தவிர்க்­கப்­ப­டக்­கூ­டி­யதே. ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை­முறையைப் பின்­பற்­று­வது பெருங்­கு­டல் புற்­று­நோய் ஏற்­படும் அபா­யத்தைக் குறைக்­கும். ஆரோக்­கி­ய­மான உணவுப் பழக்­கம், துடிப்­பான வாழ்க்கை­முறை ஆகி­ய­வற்­றின் மூலம் இந்நோய் ஏற்­படு­வதைத் தவிர்க்­க­லாம்.

சீரான இடை­வெ­ளி­களில் உடற்­ப­ரி­சோ­தனை­கள் மேற்­கொள்­வது ஆகி­ய­வற்­றின் மூலம் பெருங்­கு­டல் புற்­று­நோயை ஆரம்ப­க்கட்­டத்­தி­லேயே கண்ட­றி­வ­து­டன் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்­படுத்­து­வதற்கு முன்­பா­கவே அதற்கு உகந்த சிகிச்சை அளிக்­க­லாம்," என புற்றுநோய்ச் சங்கம் தெரிவித்தது. மருத்­து­வப் பரி­சோ­தனை­கள் மேற்­கொள்­வதை ஊக்­கு­விக்­கும் விதத்­தில் சிங்கப்­பூர் புற்­று­நோய்ச் சங்கம் பெருங்­கு­டல் புற்­று­நோய் விழிப்­பு­ணர்வு மாதத்தை 15வது ஆண்டாக ஏற்பாடு செய்­துள்­ளது. பரிந்­துரைக்­கப்­பட்ட மருத்­து­வப் பரி­சோ­தனை­களில் ஒன்று 'எஃப்ஐடி' எனப்­படும் 'ஃபேசல் இம்­யூ­னோ­கெ­மி­கல்' பரி­சோ­த னைக்­கான சிறிய சோதனைப் பெட்டி. அதை 50 வய­துக்கு மேற்­பட்ட சிங்கப்­பூ­ரர்­களுக்­கும் நிரந்த­ர­ வா­சி­களுக்­கும் சிங்கப்­பூர் புற்­று­நோய்ச் சங்கம் இல­வ­ச­மாக வழங்கு­கிறது.

இந்தச் சோதனைப் பெட்­டியைக் கொண்டு எளிதாக வீட்­டி­லேயே பரி­சோ­தனையைச் செய்­து­கொள்­ள­லாம். இதற்­கென்று உணவுப் பழக்­கத்­தில் மாற்றம் செய்யத் தேவை­யில்லை. இந்த சோதனைப்­பெட்டி மூலம் மலத்­தில் ரத்தம் தென்­படு­கிறதா என்பதைக் கண் ட­றி­ய­லாம். மெடிசேவ் அங்­கீ­கா­ரம் பெற்ற நிலை­யங்களில் 10 ஆண்­டு­களுக்கு ஒரு முறை 'கொலொ ­னோஸ்­கோப்பி' பரி­சோ­தனையும் மேற்கொள்­ள­லாம். மேல் விவ­ரங்களுக்கு www. si­n­g­ap­o­r­e­c­a­n­c­e­r­s­o­ci­e­ty.org.sg என்ற இணை­யப்­பக்­க­த்தை நாடலாம்.