'வாட்ஸ்அப்' செயலிக்கு போட்டியாக கூகலின் 'அலோ'

'வாட்ஸ்அப்' செயலிக்கு போட்டியாக கூகலின் 'அலோ'

1 mins read
a937a82e-a881-4f75-a05f-f31740f2e995
-

கூகல் நிறுவனம் 'வாட்ஸ்அப்', 'பேஸ்புக் மெசஞ்சர்' ஆகிய வற்றுக்குப் போட்டியாக புதிய செயலியை வெளியிட உள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கூகல் நிறுவனத்தின் 'டியோ' என்ற காணொளி அழைப்பு செயலியை சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். இந்நிலையில், விரைவில் 'வாட்ஸ்அப்' போன்ற குறுஞ் செய்திகளை அனுப்புவதற்கான செயலியையும் வெளியிட முடிவு செய்துள்ளது.

இதற்கு 'அலோ' எனவும் பெயரிட்டுள்ளது. இந்நிலையில் இச்செயலியின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த 'அலோ' செயலியில் 'ஸ்மார்ட் ரிப்ளை' என்ற புதிய அம்சம் உள்ளது. இந்த 'ஸ்மார்ட் ரிப்ளை' வசதி மூலம் செயலி நமது உரையாடல்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற சில பதில் களை செயலியே பரிந்துரைக்கும். எனவே பதிலை நாம் தட்டச்சு செய்யாமல், அவற்றில் இருந்து தக்க பதிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உரையாடல்களின்போது அனுப்பப்படும் படங்களுக்கும் அவை பதில்களைப் பரிந்து ரைக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட், ஆப்பிள் திறன் பேசிகளில் பயன்படுத்தும் வகை யில் இச்செயலி வெளியாகிறது.