பக்கவாதத்தை விளைவிக்கக் கூடிய 'ஆட்ரியல் ஃபிப்ரிலேஷன்' எனும் சீரற்ற இதயத் துடிப்பைக் கண்டுபிடிக்க புதிய கைபேசி செயலி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தச் சீரற்ற இதயத் துடிப்பு ரத்தக் கட்டி, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த நிலை அவ்வப்போது வந்து வந்து போகக்கூடியது என்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் வழியாக ஒரு வருக்கு 'ஆட்ரியல் ஃபிப்ரி லேஷன்' இருக்கிறதா என்பதைக் கண்டறிவது சிரமம் என்றும் கூறப்படுகிறது.
புதிய செயலி கைபேசியின் அசேலரோமீட்டரையும் கைரோஸ் கோப்பையும் பயன்படுத்தி 'ஆட்ரியல் ஃபிப்ரிலேஷனைக்' கண்டுபிடிக்கிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பால் ஒருவருக்கு 'ஆட்ரியல் ஃபிப்ரி லேஷேன்' இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஊசி மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்தத் தேவை யில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த அணுகுமுறை கிட்டத்தட்ட 100 விழுக்காடு துல்லியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

