சீனப் பாரம்பரிய இலையுதிர்கால விழாவை முன்னிட்டு கரையோரப் பூந்தோட்டங்களில் மாபெரும் விளக்குக் கூண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு வழக்கமான விளக்குக் கூண்டுகள் போல தெரிந்தாலும் இவை சாதாரணமானவை அல்ல. இவ்வாண்டின் இலையுதிர்கால விழாவுக் கான விளக்குக் கூண்டுக் காட்சியில் சிறப்பு அம்சம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரை யாளர்கள் இந்த நவீன விளக்குக் கூண்டுகளை வடிவமைத்துள்ளனர். நவீன விளக்குக் கூண்டுகள் என்று அழைக்கப் படுவதற்குக் காரணம் உள்ளது.
மெழுகுவர்த்தி, விளக்கு ஆகியவற்றால் விளக்குக் கூண்டுகள் ஒளியூட்டப்படும் காலம் போய் இப்போது இந்த நவீன விளக்குக் கூண்டுகள் கைபேசி செயலி ஒன்றால் ஒளியூட்டப்படுகின்றன. கரையோரப் பூந்தோட்டங்களுக்கு வருபவர் கள் தங்கள் கைபேசியில் இந்த Mid-Autumn@ Gardens by the Bay செயலி யைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விளக்குக் கூண்டு உறையைத் தங்கள் கைபேசிகளுக்குப் போட்டுக்கொள்ளலாம். பூந்தோட்டங்களில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் மாபெரும் விளக்குக் கூண்டுகள் வழியாக நடந்து செல்லும்போது அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் 'புளூடூத்' சாத னங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ள செயலியிலிருந்து பல வண்ணங்களை வெளியேறச் செய்யும்.
கரையோரப் பூந்தோட்டங்களில் இலையுதிர்கால விழாவை முன்னிட்டு சாங் எர், ஜேட் முயல் போன்ற சீனப் பாரம்பரிய கதாபாத்திரங்கள் வடிவில் உள்ள மாபெரும் விளக்குக் கூண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நவீன விளக்குக் கூண்டுகளைச் சிறப்புக் கைபேசி செயலி ஒன்றைப் பயன்படுத்தி ஒளியூட்டலாம். (கீழ்ப்படம்) சிறப்புக் கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து விளக்குக் கூண்டு வழியாக நடந்து செல்லும்போது கூண்டுகளின் நிறம் மாறுவதைப் பார்த்து மகிழும் பொதுமக்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

