நம் கலாசாரத்தின் பழமையினைப் பகரும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம். புள்ளி வைத்து போடும் கோலத்தில் புள்ளிகளைச் சுற்றி இணைத்தல், புள்ளிகளை இணைத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. புள்ளி வைத்து போடும் கோலங்களுக்கு தென்னிந்தியா பிரபலம் என்றால், புள்ளிகள் இல்லாமல் வளைவுகளை மட்டுமே ஒன்று சேர்க்கும் ரங்கோலி வகை கோலங்கள் வட இந்தியாவில் பிரபலம்.
நம் கலாசாரத்தின் பழமையினைப் பகரும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம். புள்ளி வைத்து போடும் கோலத்தில் புள்ளிகளைச் சுற்றி இணைத்தல், புள்ளிகளை இணைத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. புள்ளி வைத்து போடும் கோலங்களுக்கு தென்னிந்தியா பிரபலம் என்றால், புள்ளிகள் இல்லாமல் வளைவுகளை மட்டுமே ஒன்று சேர்க்கும் ரங்கோலி வகை கோலங்கள் வட இந்தியாவில் பிரபலம். கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது போடப்படும் அத்தப்பூ கோலம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. சிறுவயதில் கோலம்
சிறு வயதில் பிள்ளைகளுக்கு எழுத்துகளின் வளைவு நெளிவுகளை கற்றுக்கொடுப்பதற்காகப் புள்ளிகளை இணைக்கச் சொல்லி பயிற்சி கொடுப்பதுதான் கோலம் போட கற்றுக்கொள்வதற்கான முதல் படி. எழுத கற்றுக் கொடுப்பதோடு கோலம் போடவும் பிள்ளைகளுக்குப் படிப்படியாக கற்றுக் கொடுத்து, அவற்றுக்கு வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தி அழகுப்படுத்தவும் அவர்களை ஊக்கப்படுத்தினால் வீட்டு வாசலில் கோலம் போடும் நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லுவது மிகவும் எளிதாக இருக்கும்.
19-1 நேர்ப் புள்ளி வைத்து போடப்பட்டுள்ள இதுபோன்ற கோலங்களைப் போடத்தொடங்கியது முதல் கையை அதை முடிக்கும்வரை எடுக்காமல் கோலமிட வேண்டும் என்பது சவாலான ஒன்றாகும்.

