மீசை தாடியால் கின்னசில் இடம்

மீசை தாடியால் கின்னசில் இடம்

1 mins read
6d1188db-201d-4cf4-96a6-2ed533d90673
-

­­­லண்டன்: இங்­கி­லாந்­தில் வசிக்­கும் இந்திய வம்­சா­வளி பெண் ஒருவர் இளம் வய­தி­லேயே தாடி, மீசை கொண்­டி­ருப்­ப­தற்­காக கின்­ன­சில் இடம் பிடித்­துள்­ளார். ஹர்னாம் கவுர், 24, என்ற அந்தப் பெண் 'பாலி­சிஸ்­டிக் ஓவரி சிண்ட்­ரோம்' நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர். இதனால் அவ­ருக்கு முகம், உடலில் முடி முளைத்­துள்­ளது. சீக்கிய சம­யத்தைச் சேர்ந்த அவ­ருக்கு 11 வய­தி­லி­ருந்தே முடி வளரத் தொடங்­கி­யது. சீக்கிய சமய நம்­பிக்கை­யின்­படி முடியை வெட்­டா­மல் அவர் வளர்த்து வரு­கிறார்.

"­­­எ­னக்கு தாடி, மீசை வளர்ந்தா­லும் நான் இப்­போ­தும் பெண்மைத் தன்மை­யு­டன்தான் உணர்­கி­றேன். எனக்­குத் தாடி மீசை இருப்­பதைப் பற்றி வருத்­தம் எதுவும் இல்லை. எங்க­ளது சம்­பி­ர­தா­யத்­தின்­படி அதனை நான் விரும்­பு­கி­றேன். கடவுள் என்னை இப்படிப் படைத்­த­தற்­காக நான் மகிழ்ச்­சியே கொள்கி­றேன். சில மர்ம நபர்­கள் எனக்குக் கொலை மிரட்­டல்கூட விடுத்­துள்­ள­னர். தற்போது எனக்கு எதைப் பற்­றி­யும் கவலை இல்லை," என்று உறு­தி­யான மன­து­டன் ஹர்னாம் கூறு­கிறார். கின்­ன­சில் இடம்­பி­டிக்க பலர் படா­த­பாடு பட்­டா­லும் தாடி, மீசைக்­காக கின்­ன­சில் இடம்­ பி­டித்­ததைச் சிறுமை­யா­கக் கரு­து­கிறார் அவர்.

இளம் வயதில் தாடி, மீசை வளர்த்ததற்காக கின்னசில் இடம் பிடித்துள்ளார் ஹர்னாம் கவுர். படம்: இணையம்