புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற் குழு சென்ற சனிக்கிழமை 'டாண்டியா' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்தியாவில் நவராத்திரியின் ஓர் அங்கமான துர்க்கா வழிபாட்டின்போது வண்ண உடை அணிந்து 'கோலாட்டம்' ஆடுவது 'டாண்டியா ராஸ்' நிகழ்ச்சி. புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட 'டாண்டியா' நிகழ்ச்சியில் சுமார் 700 பேர் பங்கேற்றனர்.
பல இன மக்களும் பங்கேற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டியோ ஹோ பின் (கழுத்தில் மாலையுடன்), அவரது துணைவியார் (திரு டியோவின் வலப்புறம்) ஆகியோர் கலந்துகொண்டு கோலாட்டத்தில் பங்கேற்றனர். கலந்துகொண் டோரிடையே போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. படம்: புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம்

