நான்கைந்து நிறப் பேனாக்களை ஒன்றாக இணைத்துப் பயன்படுத்தியது பழங்கதையாகிவிட்டது. தற்போது ஒரே பேனாவைக் கொண்டு 16 மில்லியன் நிறங்களில் எழுதலாம்; வண்ணம் தீட்டலாம். அத்தகைய மின்னியல் பேனாவை 'க்ரோன்ஸி' எனும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. நம் கண்களால் காணக் கூடிய அனைத்து வண்ணங்களிலும் அந்தப் பேனா எழுதும் என்று கூறப்படுகிறது.
அதற்கான செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை கைபேசி, கணினிகளில் வைத்திருந்தால் இப்பேனாவால் நினைத்த வண்ணத்தில் எழுதலாம். இந்தப் பேனாவை உருவாக்குவதற்கு இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டது. இந்த மின்னியல் பேனா கிட்டத்தட்ட கணினி அச்சு இயந்திரத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த வகைப் பேனா பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

