மூடியிருக்கும் புத்தகத்தை, அதைத் தொடாமலேயே படிப்பதற்கும் புதிய தொழில் நுட்பம் வந்துவிட்டது. ரமேஷ் ரஷ்கர் என்ற இந்திய விஞ்ஞானி உட்பட மசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஓர் எழுத்து மட்டும் அச்சிடப்பட்ட ஒரு கற்றைத் தாள்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட போது, மேலே வைக்கப்பட்டு இருந்த ஒன்பது தாள்களில் இடம்பெற்ற எழுத்துகளை மிகச் சரியாக அடையாளம் காண முடிந்தது.
தாள்களைப் போல் மெல்லிய அடுக்குகளாக வைக்கப்பட்டுள்ள எந்தப் பொருட்களிலும் இது சாத்தியம் என்றார் திரு ரமேஷ். டெராஹெர்ட்ஸ் கதிர்வீச்சு இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. பழம்பொருட்களை ஆராயும் தொல்பொருள் ஆய்வாளர் களுக்கு இத்தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.

