'கணினித் தொழில்நுட்பம் வழி தமிழ் இசை, எழுத்து, புத்தாக்கம்' எனும் பகிர்வரங்கு கடந்த சனிக் கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடை பெற்றது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் எழுத்தாளர் விழா நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இந்தப் பயிலரங்கில் cloud based தொழில்நுட்பம் வழி, உலகின் எல்லா இடங்களிலும் இருந்து தமிழ் படைப்புகளை புத்தாக்க சிந்தனைகளுடன் உரு வாக்கும் எளிய செயல்முறைகளும் நேரடி விளக்கங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கணினி இசை படைப்பாளர் சி. குணசேகரன், கணினி வழி ஒலி, ஒளி வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப் பார்வையாளர் களிடம் பகிர்ந்துகொண்டார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் hololens செயல்முறை மூலம், எதிர்காலத் தமிழ், மெய்நிகர் தொட்டுணர்தல் தொழில்நுட்பம் மூலம் புதிய பரிணாமத்துடன், கணினி விளையாட்டுகளாகவும் மின்புத்தகங் களாகவும் உருவாகும் திட்டங்கள் செயல் விளக்கங்களாகக் காட்டப் பட்டன. மாணவி ஜின்னாஷினி தமிழ், புத்தாக்க ஊடகங்கள் வழி உலகத் தரத்திற்கு வளர்ந்திருப்பது இக்கால இளையர்களை ஈர்ப்ப தற்கு பெரிதும் உதவும் எனவும் இது போன்ற தொடர் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இன்னும் பலரைத் தமிழ் பக்கம் ஈர்க்க முடியும் என்றும் கூறினார். அரசாங்கம் வழங்கும் புத்தாக்க பயிற்சிகள் மூலம் தன்னையும் தனது நிறுவனத்தையும் மேம் படுத்தி வருவதாகக் கூறிய குணசேகரன் தமிழுக்கெனக் கணினி விளையாட்டுகளையும் புதிய ஊடக செயலிகளையும் உருவாக்கி வருவதாகக் கூறினார்.
இருவழித் தொடர்பு தொழில்நுட்பத்தின் செயல்பாட்டை மாணவி புனிதாவிடம் காண்பிக்கும் ரொங் காங் (வலது). படம்: குணசேகரன்

