கீழே விழும் அபாயம் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக முதியவர்கள் கீழே விழும் அபாயம் உள்ளதாக உள்ளுர் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 64 முதல் 98 வயதுடைய 364 நோயாளிகளிடம் சிங்ஹெல்த் பலதுறை மருந்தக ஆராய்ச்சி யாளர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மருத்துவ மாணவர் களும் இந்த ஆய்வை மேற் கொண்டனர். கேலாங் பலதுறை மருந்தகத் தின் நோயாளிகளிடம் கடந்த 2013ஆம் ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பத்தில் ஒரு வருக்குக் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பது அறியப் பட்டது.
குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது ஒருவரின் ரத்த அழுத்தம் குறைவதே இதற்கு காரணம். அதாவது உட்காரும் நிலையில் இருந்தோ படுத்து இருக்கும் நிலையில் இருந்தோ எழுந்து நிற்கும்போது ரத்த அழுத்தம் குறைந்து காணப்படு வர்களுக்கு கீழே விழும் அபாயம் அதிகம் உள்ளது. இதற்கான காரணம் குறித்து, இந்த ஆய்வில் கண்டறியப்பட வில்லை என்றாலும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குறைந்த ரத்த அழுத்தத்தினால் பாதிக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் உடலுழைப்பு இல்லாதவர்களாகவும் கடந்த காலங்களில் தலைவலி, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் களாகவும் இருந்தனர். ரத்த ஓட்டம், இதயக் கோளாறு, பக்கவாதம், சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக் கப்பட்டவர்களும் குறைந்த ரத்த அழுத்தத்தினால் பாதிக் கப்பட்டிருந்தது அறியப்பட்டது.

