'கவிமாலை 200' சிறப்பு நிகழ்ச்சி

'கவிமாலை 200' சிறப்பு நிகழ்ச்சி

1 mins read
9c492455-b318-4608-88ae-8fa5cf000d47
-

சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பு கடந்த 200 மாதங்களாகத் தொடர்ந்து மாதாந்திர நிகழ்ச்சி களை நடத்தி வருகிறது. உள்ளூர் கவிஞர்கள் கூடி கவிதை வாசித்தல், இலக்கண வகுப்பு, அறிஞர்களின் இலக்கியப் பேச்சு என அதன் நிகழ்ச்சிகள் அமையும். கடந்த ஞாயிறு அன்று உமறுப் புலவர் தமிழரங்கில் அதன் 200வது மாத நிகழ்ச்சியை கவி மாலை சிறப்பாகக் கொண்டாடியது.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்து அறக் கட்டளை வாரியத்தின் துணைத் தலைவர் திரு.இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கவிமாலையில் பங்கேற்ற மாணவர்கள். படம்: கவிமாலை