உயில் குறித்து இலவச சட்ட ஆலோசனை

உயில் குறித்து இலவச சட்ட ஆலோசனை

1 mins read

3, காமன்வெல்த் டிரைவில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் இரண்டாம் தளத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் இம்மாதம் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 முதல் நண்பகல் 12 மணி வரை உயில் நிரூபணப் பத்திரம், நீண்டகால அதிகாரப் பத்திரம், நவீன மருத்துவ வழிகாட்டி ஆவணம் ஆகியவை குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. விதர்ஸ் கட்டார்வோங் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஜி.ராமன் இவ்விவரங்கள் குறித்து விளக்கமளிக்க இருக்கிறார். இவர் உயில்கள் நிரூபணப் பத்திரம் குறித்து பல நிறுவனங்களில் கருத்தரங்கங்களும் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியுள்ளார். அனுமதி இலவசம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆலயத்தின் இலவச சட்ட உதவிப் பிரிவு 2017 ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டும் இலவச உயில் எழுதும் சேவையை வழங்கவிருக்கிறது.