100, டெப்போ சாலை ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தில் முந்தைய ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் எட்டு வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு சமயம், இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளைக் கற்றுத்தரும் வகையில் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இம்மாதம் 19ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 11.45 மணி வரை இந்த வகுப்புகள் இடம்பெறும். இந்தியாவின் புகழ்பெற்ற சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் இவ்வகுப்புகளை நடத்துகிறார். வகுப்பு களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும். தேவையானோ ருக்குப் பேருந்து வசதியும் செய்து தரப்படும். மேல்விவரங்களுக்கு 62737470 என்ற எண் ணில் ஆலயத்தைத் தொடர்புகொள்ளலாம்.
சமய, இலக்கிய, பண்பாட்டு வகுப்புகள்
1 mins read

