பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

1 mins read

லிஷாவின் ஆதரவில் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தேக்கா ஹேஸ்டிங் ரோடு பொங்கல் சிறப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆண்டு தோறும் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகத்தால் நடத்தப்படும் இப் பட்டிமன்றம் இந்த ஆண்டு பொங்கலின்போது நாம் அதிகம் போற்ற வேண்டியது பழமையே! புதுமையே! என்ற தலைப்பின்கீழ் நடைபெற உள்ளது. 'பழமையே' என்ற தலைப்பில் முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன், திரு கே.வி. ராஜா, திருமதி அகிலா ஹரிஹரன் பேச உள்ளனர். 'புதுமையே' என்ற தலைப்பில் திரு ச. ராம்குமார், முனைவர் எமர்சன் ராஜா, திரு கண்ணன் பேச உள்ளனர்.