சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியங்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் அங்கீகாரம்

சிங்கப்பூர் தமிழ்ப் படைப்புகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் நாட்டின் தாய்ப் பல்கலைக்கழக மான சென்னை பல்கலைக்கழகம் உரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது. அங்கு அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் படைப் பிலக்கியங்கள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கில் அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் படைப்புகள் வேறு எந்த நாட்டையும்விட தரத்தில் குறைந்தது அல்ல என்று படைப்பு களை ஆய்வு செய்த பேராசிரி யர்கள் வலியுறுத்தினர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆதரவுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை, சிங்கப்பூர் படைப்பிலக்கியங்கள் பற்றிய அந்த ஒருநாள் கருத்தரங்கை இம்மாதம் 3ஆம் தேதி ஏற்பாடு செய்து நடத்தியது.

தொடக்க நிகழ்ச்சியில் வர வேற்புரை ஆற்றிய அப்பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் பேராசிரியர், முனைவர் ஒப்பிலா மதிவாணன் "ஒரு நாட்டின் படைப்பிலக்கியங் கள் மட்டுமே ஆய்வு செய்யப் படுவது இதுவே முதல்முறை," என்று கூறினார். நோக்கவுரை ஆற்றிய சிங்கப் பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், "சிங்கப்பூர்ப் படைப்புகளில் எதுவுமே இல்லை என்று ஒரு சிலர் குறை கூறுகின்றனர். அது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்ளவே இன்று எங்கள் படைப்புகளை அக்கினிப் பரிட்சைக்கு ஆளாக்கியிருக்கி றோம்," என்று குறிப்பிட்டார். கருத்தரங்கிற்குத் தலைமை யேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன், அந்தக் காலத் தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பலில் மிகவும் தூய்மையற்ற சூழலில் சென்ற தமிழர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட மலாயாவை வளப்படுத்த பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்றும் இன்று சிங்கப்பூரில் அவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர் என்றும் கூறினார்.

வாழ்த்துரை வழங்கிய சிங்கப்பூர் 'சிம்' பல்கலைக்கழகப் பேரா சிரியர் சுப. திண்ணப்பன், சிங்கப் பூர் அரசாங்கமும் அமைப்புகளும் தமிழை வளர்க்க ஆற்றுகின்ற பணிகளை எடுத்துரைத்தார். இறுதியாக சிறப்புரை ஆற்றிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் பல் வேறு சிங்கப்பூர்க் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அவர்களின் சிந்தனை யும் கருத்தும் சிறப்பாகவே இருப்பதாக அவர் கூறினார். 2017-01-09 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!