சென்னை புத்தகக் கண்காட்சி: முத்தமிழ் விழா நாவல்கள் நூலாக வெளியீடு

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் கூடத்திற்கு மலேசிய இளையர் விளையாட்டுத் துறைத் துணை அமைச்சர் எம். சரவணன், கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன், நடிகர் ராஜேஷ், கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடி ராதா கிருஷ்ணன், கவிஞர் உதயை மு. வீரையன் ஆகியோரும் வருகைபுரிந்தனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 40ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி முத்தமிழ் விழாவின்போது நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற நாவல்கள் ஆறையும் ஒரே நூலாக வெளியிட இருக்கிறது.

வெளியீட்டு விழா நாளை பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 மணி வரை சென்னைப் புத்தகக் காட்சியின் சிற்றரங்கில் நடைபெறும். அவ்விழா வில் எழுத்தாளர் திரு. பாரதி கிருஷ்ணகுமார், சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன், நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் மருதூர் அரங்கராசன் ஆகியோர் உரையாற்று கின்றனர். தென்னிந்திய புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் வாழ்த்துரை வழங்கி நூலை வெளியிடுகிறார். முதல் நூலை வ.உ.சி.யின் பேரன் திரு. ப. முத்துக்குமாரசுவாமி பெற்றுக் கொள்வார்.

சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 388 & 429 எண்களில் உள்ள சிங்கப்பூர் கூடத்திற்கு வரும் பார்வையாளர்கள் சிங்கப்பூர் படைப்புகளைப் பார்வையிடுவதுடன் நூல்களையும் வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் விடுமுறையின்போது அதிகமான பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!