தந்தையின் வழிகாட்டுதலில் வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மகன்

தம்முடைய தந்தை 37 ஆண்டுக ளாக போலிஸ் படையில் பணி யாற்றி வருவதால் தேசிய சேவை யின்போது தமக்கும் போலிஸ் படையில் பணியாற்ற வாய்ப்புக் கிட்டும் என 23 வயது திவாகர் ராஜசேகரன் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கடந்த மூன்று மாதங்க ளாக போலிஸ் படையில் அடிப் படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார் திவாகர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்க காவல் அதிகாரியாகப் பணி யாற்ற அடுத்த மூன்று மாதங்க ளுக்கு அவருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

"நான் தேசிய சேவைக்கு செல் வதற்குமுன், என்னுடைய தந்தை போலிஸ் பயிற்சியின்போது எப் போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவு றுத்தினார். "அடிப்படை பயிற்சியின் போது நாம் காயப்படுவதற்கான வாய்ப்பு கள் அதிகம் உள்ளன. அத்தகைய காயங்களையும் தவிர்த்து எவ்வாறு பாதுகாப்பாக செயல்படவேண்டும் என்பதைப் பற்றி அவர் எனக்கு அதிகம் அறிவுறுத்துவார்," என்று கூறினார் திவாகர்.

தேசிய சேவை கடமையாற்ற தமது மகன் போலிஸ் படையில் சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் திவாகரின் தந்தையான 55 வயது திரு ராஜசேகரன் ராஜகோபால். அவர் போலிஸ் படையில் துணை போலிஸ் சூப்ரின்டென் டண்டனாகப் பணியாற்றுகிறார்.

தந்தை ராஜசேகரன், தாயார் டோரிஸ் ஏஞ்சல்ஸ் தாமரை இருவருடன் போலிஸ் அடிப்படை பயிற்சியை முடித்திருக்கும் திவாகர் ராஜசேகரன். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!