மகா சிவராத்திரி ஏற்பாடுகள் மும்முரம்

மகா சிவராத்திரி ஏற்பாடுகள் மும்முரம்

1 mins read
1b5391cd-c2bd-4916-ac8b-73c9ad283dd0
-

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத் தில் ஸ்ரீ சிவபெருமானுக்காகக் கொண்டாட்டப்படும் மகா சிவ ராத்திரி விழாவிற்கு சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள் ஆயத்த மாகி வருகின்றன. பக்தர்கள் நாளை மறுநாள் இரவு முழுவதும் கண்விழித்து கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வர். இதன் தொடர்பில், கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோவில் இந்த விழாவிற்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறது. நாளை முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை அங்கு சிவபெருமானுக்குச் சிறப்பு லட் சார்ச்சனை இடம்பெறும்.

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் நாளை மறுநாள் இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவிருக்கும் 1,008 பால்குட அபிஷேகத்தில் $12 கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்கலாம். படம்: இந்து அறக்கட்டளை வாரியம்