மனதைரியம் அளிக்கும் திருக்குறள்

மனதைரியம் அளிக்கும் திருக்குறள்

1 mins read
7a6fad36-bb50-49a2-b3aa-f084c5c2b16a
-

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

தமிழின் சிறப்புமிக்க நூலாகக் கருதப்படும் திருக்குறள் மீது குழந்தைகளுக்குச் சிறு வயதிலே ஆர்வத்தை உண்டாக்குவதற்காக திருக்குறள் விழாவைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் கடந்த 31 ஆண்டுகளாக நடத்தி வரு கிறது. கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் திருக்குறளின் முப்பால் களான அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால் ஆகியவற்றைப் பற்றி தங்களது அறிவுபூர்வமான, சுவாரசியமான பேச்சுடன் பார்வை யாளர்களைக் கவர்ந்தனர் நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளர்க ளான முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு ஜோதி மாணிக்கவாசகம், முனைவர் க.ராஜகோபாலன் ஆகியோர்.

இவ்வாண்டிற்கான திருவள்ளுவர் விருதைப் பெற்ற முத்தழகு மெய்யப்பனுடன் (இடமிருந்து 2வது), (இடமிருந்து) முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், வளர்தமிழ் இயக்கத் தலைவர் ஆர். ராஜாராம். படம்: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்