'இத்தனை முறைதான் 'புஷ் அப்' செய்யவேண்டும் என்ற அவசியமில்லை'

'இத்தனை முறைதான் 'புஷ் அப்' செய்யவேண்டும் என்ற அவசியமில்லை'

1 mins read
bf91bd26-1f7b-47ca-8032-5738e25f1129
-

உடற்பயிற்சிகள் பொதுவாக உடல் ஆரோக்கியமாகவும் வாளிப்பாகவும் இருக்க பெரும் பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சிகளுள் முக்கிய ஒரு பயிற்சியான 'புஷ் அப்' பயிற்சியை ஒருநாளைக்கு இத்தனை முறை தான் செய்யவேண்டும் என்ற அவ சியம் இல்லை. இது ஒருவரின் உடல் வலிமை, சக்தி சார்ந்தது. ஒரு ஆரோக்கியமான 25 வயது ஆண் 39 'புஷ் அப்' வரை செய்யலாம். அதே நபரால் தினசரி இதனைச் செய்யும்போது 54 அல்லது அதற்கும் அதிகமான முறை கூட இந்தப் பயிற்சியை செய்யமுடியும். 50 வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் 21 'புஷ் அப்' பயிற்சி செய்வது நல்லது. பெண்களும் இந்த 'புஷ் அப்' உடற்பயிற்சியை செய்கின்றனர்.

25 வயது மதிப்புடைய ஒரு பெண் 25 'புஷ் அப்' செய்யலாம். முயன்றால் அதற்கு மேலும் கூட செய்யமுடியும். உடனடியாக இதில் பலன் காண முடியாது. நீங்கள் தினசரி இந்த உடற்பயிற்சியை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் சுவரில் கைகளை வைத்து, கைகளின் உந்துதல் மூலம் முன்னும் பின்னும் சென்று வரலாம். இதனை 12 தடவை, நாளுக்கு மூன்று முறை செய்யலாம். இதை நன்றாக தேர்ந்தவுடன் நீங்கள் தரையில் செய்யும் 'புஷ் அப்' உடற்பயிற்சிக்குச் செல்லலாம்.