வீ. பழனிச்சாமி
இந்து ஆலயங்கள் என்பது வழி பாட்டு இடங்களாக மட்டும் இருக் கக்கூடாது. மாறாக சிறியவர், பெரியவர், முதியோர் என அனைத் துத் தரப்பினருக்கும் ஏற்ற நட் பார்ந்த இடமாக அவை திகழ வேண்டும் என்ற இலக்குடன் திட் டங்களை வகுத்து வருகிறார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர். கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் புதிய பொறுப்பில் செயல்பட்டு வரும் திரு ராஜசேகர், "சிங்கப்பூரில் உள்ள இதர இந்து ஆலயங் களில் கடைப்பிடிக்கப்படும் செயல்முறைகளை இந்து அறக்கட் டளை வாரியத்தின் கீழ் இயங்கும் ஆலயங்கள் பின்பற்றலாம். அதே போல மற்ற ஆலயங்களில் கடைப் பிடிக்கப்படும் நல்ல செயல்முறை களை வாரியத்தின் ஆலயங்கள் பின்பற்றலாம்," என்றார். வாரியத்தின் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பணி யாற்றி இந்து அறக்கட்டளை வாரி யத்தின் செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று யோசித்த திரு ராஜசேகர், இதற்கு முன் சுமார் நாலரை ஆண்டுகளாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் இதற்கு உந்துதலாக அமைந்தது என்றார்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர் (வலது) ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அலுவலக அதிகாரிகளிடம் உரையாடுகிறார். படம்: த. கவி

