சவுத் பிரிட்ஜ் சாலையின் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வருடாந் திர தீமிதித் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 8ஆம் தேதி அன்று நடைபெறும். சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் மாலை சுமார் 6 மணியளவில் அலங்கரிக் கப்படும் கரகத்துடன் இரவு சுமார் 7 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தை நோக்கி தலைமைப் பண்டாரம் புறப்படுவார். கிட்டத்தட்ட 4,500 பக்தர்களை வழிநடத்திச் செல் லும் தலைமைப் பண்டாரம் இரவு சுமார் 8 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை வந்தடைவார். அதை தொடர்ந்து ஆண் பக்தர்கள் அனைவரும் தீமிதித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியவுடன் பெண் பக்தர்கள் தீக்குழியைச் சுற்றி வருவர். ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதம் வரும் 6ஆம், 7ஆம் தேதி களில் குடியிருப்புப் பேட்டைகளை வலம் வரும். 6ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கும் 7ஆம் தேதி அன்று மாலை 5.15 மணிக்கும் வெள்ளி ரதம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத் திலிருந்து புறப்படும். தீமிதித் திருவிழாவைத் தொடர்ந்து இம்மாதம் 9ஆம் தேதி அன்று திரௌபதை அம் மனை ஏந்திய வெள்ளி ரதம் இரவு சுமார் 8 மணியளவில் சிராங் கூன் சாலையை வலம் வரும்.
8ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீமிதித் திருவிழா
1 mins read

