முதல் உடற்பிடிப்பு இயந்திரம் 'எம்மா'

முதல் உடற்பிடிப்பு இயந்திரம் 'எம்மா'

1 mins read
996af277-7bfe-4383-840c-fd599bcfc994
-

எண் 1 ராஃபிள்ஸ் பிளேசில் முடியாது. உள்ள நோவாஹெல்த் பாரம்பரிய சீன மருந்தகத்திற்குச் செல்லும் நோயாளிகள் இனி அங்குள்ள 'எம்மா' என்ற இயந்திர மனிதனின் உடற்பிடிப்புச் சேவையையும் பெற முடியும். வெள்ளை நிற இயந்திரத்தி லிருந்து விரிவடையும் 'எம்மா'வின் இரு கரங்கள், முதுகு மற்றும் மூட்டு வலிக்கு இதமாகப் பிடித்து வலி நிவாரணியாகத் திகழ் கின்றன. புதிய எம்மா இயந்திர மனிதனின் சேவை நேற்று அதி காரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக் கழகத்தின்கீழ் தொடங் கப்பட்ட 'AiTreat' என்ற நிறு வனம் உடற்பிடிப்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்பிடிப்பு சாதனத்தை உருவாக் கும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக 'எம்மா' மனித இயந்திரம் உயிர் பெற்றுள்ளது. இரு கரங்களின் முனையில் உடற்பிடிப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ள மென்மையான சிலிக் கான், 38 டிகிரி முதல் 40 டிகிரி வரை சூடேற்றப்படுவதால் மனித கரங்களைப் போன்ற உணர்வைப் பெற முடியும். ஆனால் 'எம்மா'வின் சேவை மருத்துவரின் ஆலோ சனைக்குப் பிறகே வழங்கப்படு கிறது.

நோவாஹெல்ட் பாரம்பரிய சீன மருந்தகத்தில் உடற்பிடிப்பு சேவை வழங்கும் 'எம்மா' மனித இயந்திரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்