ஒமேகா-3 பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த வால்நட், மீன், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை உட் கொண்டால் 'டைப்=2' நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒமேகா=3 கொழுப்பு அமிலங் களில் முக்கியமான லினோலியிக் அமிலம் ஒருவரது ரத்தத்தில் அதிகமாக இருந்தால் எதிர்காலத் தில் அவர் 'டைப்=2' நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயம் 35% குறையும் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் 'டைப்-2' நீரிழிவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஒருவரது உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றத்தைச் செய்தாலே அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் சிட்னி நகரில் அமைந்துள்ள 'ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் ஹெல்த்' கல்வி நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேசன் வு.
இந்த ஆய்வில் பங்குகொண்ட வர்கள் அனைவரும் தொடக்கத் தில் ஆரோக்கியமான நிலையில் இருந்தனர் என்றும் அவர்கள் இதைத்தான் உண்ணவேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் விதிக்க வில்லை என்றும் மூத்த ஆய்வு வல்லுநரான டேரியஸ் மொஸா ஃபரியன் கூறினார்.

