ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கான ios இயக்க மென்பொருள் மிகவும் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் இயக்க மென்பொருளைத் தனது முழு கட்டுப்பாட்டில் ஆப்பிள் நிறுவனம் வைத்திருப்பதே இதற்குக் காரணம். ஆனால் இதையும் தாண்டி இணைய ஊடுருவல் காரர்கள் ios இயக்க மென்பொருளை ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடும் வழிகளைக் கண்டுபிடிக் கின்றனர். ஐஃபோன் பயன்படுத்தும் ஒருவருக்கு அண்மையில் இத்தகைய பிரச்சினை ஏற்பட்டது. சமையல் செயலி ஒன்றை அவர் பயன்டுத்திக் கொண்டிருந்தபோது அவரது ஆப்பிள் அடையாள மறைச்சொல் கேட்கப்பட்டது. பொதுவாக மென்பொருளை மேம்படுத்த மறைச்சொல் கேட்கப்படு வதுண்டு. செயலிகள் ஆப்பிள் அடையாள மறைச்சொல்லைக் கேட்க ஆப்பிள் நிறுவனம் அனுமதிப்பதில்லை என்று தெரிந்து வைத்திருந்த அந்த நபர் மறைச்சொல்லைத் தட்டச்சு செய்யாமல் 'ஹோம்' பொத் தானை அழுத்தி அந்தச் செயலியிலிருந்து வெளியேறினார். ஆப்பிளுக்குச் சொந்தமான செயலிகள் கேட்டால் மட்டுமே மறைச்சொல்லைக் கொடுக்குமாறு பயனீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. 'ஹோம்' பொத்தானை அழுத்திய பிறகு மறைச்சொல் கேட்கப்பட வில்லை என்றால் அது சந்தேகத்துக்குரியதாகும்.
ஐஃபோன் மறைச்சொல் குறித்து கவனம்
1 mins read