'கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி'

'கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி'

1 mins read

சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தின் ஆதரவில், அ.கி. வரதராசன் எழுதியுள்ள ‚'கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி' ‚ என்ற நூல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்படுகிறது. நூலை நாடாளுமன்ற முன் னாள் நியமன உறுப்பினர் திரு இரா. தினகரன் அவர்கள் வெளியிடுகிறார். முதல் படியை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் சங்கத்தின் (சிண்டா) தலைவர் திரு கு.பரதன் பெற்றுக்கொள் வார். நூல் விற்பனைத் தொகை முழுவதும் வெள்ளிக்கு வெள்ளி நூலாசிரியரால் ஈடுகட்டப்பட்டு, சிண்டாவுக்கு நன்கொடையாக வழங்கப்படும். நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு அங்கமாக மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரத்தின்‚கம்பனின் 'காப்பியக் குறிக்கோள்' ‚ என்ற தலைப்பிலான பேருரை இடம் பெறும்.

இடம் அருள்மிகு தெண்டாயுத பாணி ஆலய பல்நோக்கு மண்டபம், (மூன்றாவது மாடி). நேரம்: மாலை 6 மணி. அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.